ரஷ்ய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய பிரித்தானியா ஏவுகணை! வெளியான வீடியோ ஆதாரம்
உக்ரைனில் முதல் முறையாக பிரித்தானியா ஏவுகணை ரஷ்ய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியுள்ளது.
இதை பிரித்தானியாவின் The Times செய்தித்தாள் உறுதிப்படுத்தியுள்ளது.
உக்ரைனில் முதல் முறையாக ரஷ்ய ஹெலிகாப்டரை பிரித்தானியாவின் மிகவும் மேம்பட்ட ஏவுகணை அமைப்பான Starstreak சுட்டு வீழ்த்தியதாக செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
கிழக்கு Luhansk பிராந்தியத்தில் ரஷ்யாவின் Mi-28N ஹெலிகாப்டரை பிரித்தானியா ஏவுகணை தாக்கி இரண்டாக உடைப்பதை வீடியோ காட்டுகிறது என்று The Times செய்தித்தாள் கூறியுள்ளது.
திடீரென மயங்கி சரிந்த சீமான்... கமெராவில் பதிவான காட்சி
உக்ரைனில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக பிரித்தானயாவின் Starstreak அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், வீடியோவில் காட்டப்பட்டுள்ள அமைப்பு Starstreak என நம்புவதாகவும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில், பிரித்தானியா உட்பட மேறகத்திய நாடுகள், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி உதவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.