பிரித்தானியாவை உலுக்கும் மோசமான வானிலை! காணாமல் போன முதியவர்: கண்டெடுக்கப்பட்ட சடலம்
பிரித்தானியாவில் காணாமல் போன முதியவரை தேடும் பணியில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன முதியவர்
பிரித்தானியாவின் வடக்கு வேல்ஸ் பகுதியில் 75 வயது பிரையன் பெர்ரி என்ற முதியவர் காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணியில் பொலிஸார் களமிறங்கினர்.
முதியவர் பிரையன் பெர்ரி(Brian Perry) தன்னுடைய நாயை கான்வி நதிக்கு(River Conwy) அருகே நடை பயிற்சிக்கு அழைத்து சென்ற போது காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட ஆற்றுப் பகுதியில் நேற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நிலையில், கடலோர காவல்துறை மற்றும் வடக்கு வேல்ஸ் பொலிஸார் முதியவரை தீவிரமாக தேடும் பணியில் களமிறங்கினர்.
75 வயதான முதியவர் பிரையன் பெர்ரி கடைசியாக கோவர் ரோட்டில்(Gower Road) 4.30 மணிக்கு சுற்றி காணப்பட்டுள்ளார்.
அவர் கடைசியாக சிவப்பு நிற பெர்காஸ் நீர்ப்புகா ஜாக்கெட் அணிந்து கொண்டு தனது மனைவி மற்றும் நாயுடன் இருந்துள்ளார்.
கண்டெடுக்கப்பட்ட சடலம்
இந்நிலையில் முதியவரை தேடும் பணியில் ஈடுபட்டு இருந்த பொலிஸார் இறுதியில் மனித சடலம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து வடக்கு வேல்ஸ் பொலிஸின் தலைமை ஆய்வாளர் சைமன் க்னீல்(Simon Kneale), இநத கடுமையான வானிலை சூழ்நிலைக்கு மத்தியில் தேடுதல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து இருப்பதுடன், அவர்களின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |