பிரித்தானியாவில் ஆற்றில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்..
பிரித்தானியாவில் மூன்று வாரங்களாக காணாமல் போன இளைஞர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
நேதன் பிளீட்வுட் (Nathan Fleetwood) எனும் 21 வயது பிரித்தானிய இளைஞர் கடைசியாக, கடந்த மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை ஷ்ரோப்ஷயரின் ஷ்ரூஸ்பரியில், நண்பர்களுடன் இரவு வெளியே சென்றார்.
ஆனால், அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினரால் புகாரளிக்கப்பட்ட நிலையில், மேற்கு மெர்சியா பொலிஸார் அவரை தேடிவந்தனர்.
PC: West Mercia Police
இந்நிலையில், கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கழித்து வெள்ளிக்கிழமை மாலை, Severn ஆற்றில் Kingsland பாலத்திற்கு அடியில் மேற்கு மெர்சியா தேடல் மற்றும் மீட்பு குழுவினரால் பிளீட்வுட் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் முறையாக அடையாளம் காணப்படவில்லை என்றும் மேற்கு மெர்சியா பொலிஸ் தெறிவித்துள்ளது.

