ஒரே நாளில் இருமடங்கு... பிரித்தானியாவில் குரங்கு அம்மை நோய் பரவல் அச்சம்
பிரித்தானியாவில் குரங்கு அம்மை நோய் ஒரே நாளில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
புதன்கிழமை கூடுதலாக இரண்டு பேர்களுக்கு குரங்கு அம்மை நோய் அடையாளம் காணப்பட்டன, இதனையடுத்து மொத்த எண்ணிக்கை 9 என அறிவிக்கப்பட்டது. ஆனால் மேலும் 11 பேர்களுக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, 5,000 டோஸ் பெரியம்மை தடுப்பூசி பிரித்தானியாவில் கையிருப்பு இருப்பதாகவும், மேலும் 20,000 டோஸ் மருந்து வாங்கப்படும் என அமைச்சர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் உறுதி செய்யப்பட்ட நோய் பாதிப்பாளர்களில் ஒருவர் லண்டனை சேர்ந்தவர் எனவும் இரண்டாமவர் தென்கிழக்கு இங்கிலாந்தை சேர்ந்தவர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை நோயானது லேசான பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் சில ஐரோப்பிய நாடுகளில் இதேபோன்ற பரவல் ஏற்பட்டுள்ளது காரணமாக போரிஸ் அரசாங்கத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.