போதை மருந்தால் சீரழிந்த பிரித்தானிய பிரதேசங்கள்... மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியல்
பிரித்தானியாவில் போதை மருந்தால் மிகவும் சீரழிந்த பகுதிகளின் பட்டியல் வெளியானதில் யார்க்ஷயர் மற்றும் ஹம்பர் பகுதிகள் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
யார்க்ஷயர் மற்றும் ஹம்பர்
பிரித்தானியாவில் Delamere Health என்ற நிறுவனம் முன்னெடுத்த ஆய்வில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் யார்க்ஷயர் மற்றும் ஹம்பர் பகுதிகளில் போதை மருந்து பயன்பாடு என்பது 31 சதவீதம் அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
@getty
தொடர்புடைய பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கும் லண்டனில் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தென் மேற்கு பகுதியில் போதை மருந்து பயன்பாடு கடந்த 5 ஆண்டுகளில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஐந்தாவது இடத்தில் இருக்கும் வடமேற்கில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. வேல்ஸ் பகுதிகளில் 7 சதவீதம் எனவும் தெரியவந்துள்ளது. ஆனால் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதியில் வெறும் 3 சதவீதம் என்றே ஆய்வில் தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, நம்பிக்கை அளிக்கும் வகையில் இங்கிலாந்தின் வடகிழக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரண்டு பகுதிகளிலும் கடந்த 5 ஆண்டுகளில் போதை மருந்து பயன்பாடு 14% வரையில் குறைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு வேளையிலேயே மக்களில் போதை மருந்து பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் தொடர்புடைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கைப்பற்றுதலின் தலைநகரம்
மேலும், அதிக சதவீத தனிநபர்கள் பணி நீக்கம் செய்யப்படும் சூழலில் வைக்கப்பட்டதால் ஓய்வு நேரம் அதிகரித்தது, அத்துடன் சலிப்பு மற்றும் சமூக கட்டுப்பாடுகள் மூலமாக தனிமைப்படுத்தலும் போதை மருந்து பயன்பாட்டை அதிகரிக்க செய்தது.
@getty
மேலும், வேலை இழந்ததால் ஏற்பட்ட அழுத்தம், உறவினர்கள் அல்லது நெருக்கமானவர்கள் கொள்ளை நோய்க்கு மரணமடைந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளவும் பலர் போதை மருந்தை நாடியுள்ளனர்.
இதனிடையே, வெளியான அறிக்கையில் காவல்துறையினரால் போதைப்பொருள் கைப்பற்றுதலின் தலைநகரம் லண்டன் என்றும் தெரியவந்துள்ளது. மொத்தமாக 5,961 எண்ணிக்கையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தின் கிழக்கு பகுதி இடம்பெற்றுள்ளது. கேம்பிரிட்ஜ், பெட்ஃபோர்ட், நார்விச், லூடன், செம்ஸ்ஃபோர்ட் மற்றும் பீற்றர்பரோ உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இங்கிருந்து 4,011 முறை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |