பிரித்தானியாவில் மிகவும் மகிழ்ச்சியற்ற பகுதி இதுதான்... மக்கள் தெரிவித்த உண்மை பின்னணி
பிரித்தானியாவின் மிகவும் மகிழ்ச்சியற்ற பகுதியாக இங்கிலாந்தின் வடகிழக்கை உத்தியோகப்பூர்வமாக அடையாளப்படுத்தியுள்ளனர்.
மகிழ்ச்சியற்ற பகுதி
இங்குள்ள மக்கள் தங்கள் பகுதி தொடர்பில் மிகுந்த அதிருப்தியில் உள்ளதாகவும், சாலை வசதி உட்பட குறைகள் தான் அதிகம் என கூறியுள்ளனர்.
@getty
மட்டுமின்றி, நார்தம்பர்லேண்ட், டர்ஹாம் மற்றும் டைன் மற்றும் வேர் பகுதி மக்களும் தங்கள் தேவைக்கு பொது மருத்துவர்கள் இல்லை எனவும் அதிக ஊதியம் வழங்கும் பணிகள் கூட இல்லை என புலம்புகின்றனர்.
பிரித்தானியாவின் மிகவும் மகிழ்ச்சியான பகுதிகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் லண்டன் நகரம் உள்ளது. முதலிடத்தில் தென் மேற்கு, இரண்டாவது இடத்தில் தென் கிழக்கு நான்காவது இடத்தில் கிழக்கு இங்கிலாந்து ஐந்தாவது இடத்தில் கிழக்கு மிட்லாண்ட்ஸ் பகுதி தெரிவாகியுள்ளது.
லண்டன் நகரம்
குறித்த பட்டியலில் 10வது இடத்தில் யார்க்ஷயர் பகுதியும் 9வது இடத்தில் ஹம்பர் பகுதியில் தெரிவாகியுள்ளது. 6வது இடத்தில் வடக்கு அயர்லாந்தும், 7வது இடத்தில் ஸ்கொட்லாந்தும், 8வது இடத்தில் வேல்ஸ் பகுதியும் தெரிவாகியுள்ளது.
@getty
மட்டுமின்றி, பிரிஸ்டல், கார்ன்வால், டோர்செட், டெவோன், க்ளௌசெஸ்டர்ஷைர், சோமர்செட் மற்றும் வில்ட்ஷயர் ஆகிய இடங்களில் உள்ள முக்கால்வாசி மக்கள் வேறு பகுதிகளுக்கு குடிபெயரவே விரும்ப மாட்டார்கள் என கூறப்படுகிறது.
மேலும், தென் கிழக்கு பகுதியில் வசிக்கும் 73% மக்களும், இங்கிருந்து வெளியேறி வேறு எங்கும் வசிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.
நியூகேஸில் பகுதி கூட வந்தாரை வாழவைக்கும் பகுதி என்றே கூறுகின்றர்.