25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை
பிரித்தானியாவில் பெண் ஒருவரை 25 ஆண்டுகளாக அடிமையாக வைத்திருந்த குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
25 ஆண்டுகள் அடிமைத்தனம்
பிரித்தானியாவின் குளோஸ்டர்ஷையர் பகுதியில் பெண் ஒருவரை 25 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வீட்டுக்குள் அடைத்து வைத்த குற்றத்திற்காக அமண்டா விக்சன் என்ற 56 வயது பெண்ணுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமண்டா விக்சன், டியூக்ஸ்பரி நகரில் உள்ள தன்னுடைய வீட்டை சிறைச்சாலையாக மாற்றி “K” என்ற பெண்ணை கிட்டத்தட்ட 16 வயதிலிருந்து அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

கற்றல் குறைபாடு கொண்டிருந்த “K” என்று அழைக்கப்படும் அந்த பெண்ணை விக்சன் 1996ம் ஆண்டு தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
அந்த வீட்டில் K அடைத்து வைத்து சித்திரவதை செய்த விக்சன், துடைப்பக் கட்டையால் அடித்து அந்த பெண்ணின் பற்களை உடைத்துள்ளார். தலையை கழிவறை தொட்டிக்குள் அழுத்தி சித்ரவதை செய்ததுடன், K-யின் தலை முடியை வலுக்கட்டாயமாக மழிக்க செய்து ப்ளீச்சிங் திரவத்தை முகத்தில் ஊற்றி பாத்திரம் கழுவும் திரவத்தை குடிக்க செய்து ரசித்துள்ளார்.
மேலும் சாப்பிடுவதற்கு போதுமான உணவு, மருத்துவ சிகிச்சைகள் எதுவும் வழங்காமல், மிச்சம் மீது இருக்கும் உணவையே K-க்கு வழங்கி வந்துள்ளார்.
விக்சன் மகன் அளித்த புகார்
இந்நிலையில் விக்சனின் 10 மகன்களில் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வீட்டுக்கு சோதனைக்கு சென்ற பொலிஸார் பாதிக்கப்பட்ட பெண்ணை அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து பத்திரமாக மீட்டனர்.

ஜன்னல்கள் இல்லாத, மின் விளக்கு வசதி இல்லாத இருட்டு அறையில் அழுக்கு படுக்கை விடுப்புகளுடன் அந்த இடம் இருப்பதை பார்த்து பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இத்தனை ஆண்டுகளாக அவர் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டு அவரை வீட்டு வேலைகள் செய்ய கட்டாயப்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் 25 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வழங்கி வந்த மாற்றுத்திறனாளி நலத்திட்ட உதவிகளையும், பிற பண பலன்களையும் விக்சன் தனது வங்கி கணக்கிற்கு மாற்றி அதை அனுபவித்து வந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL ல் இணையுங்கள். |