இதை படிக்கும்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன்., சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய தாயின் துயரமான முடிவு
மகனை இழந்த கவலையில் பிரித்தானிய பெண் ஒருவர் சுவிட்சர்லாந்தில் உள்ள கிளினிக்கில் தன்னிச்சையாக உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
51 வயதான அன் கானிங்க் (Anne Canning), குடும்பத்தினருக்கு எதுவும் தெரிவிக்காமல் Pegasos கிளினிக்கில் உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்துள்ளது.
டென்னிஸ் பயிற்சியாளராக வேலை செய்துகொண்டிருந்த 26 வயதான அவரது மகன் ஜோ கானிங்க் (Joe Canning), 19 மாதங்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.
அன் வழக்கமான விடுமுறைக்கு சென்றதாக குடும்பத்தினர் நினைத்திருந்தனர். ஆனால் அவரிடம் இருந்து வந்த “குட்பை” கடிதங்கள் அவர்களைக் துயரத்தில் ஆழ்த்தியது.
அன்னின் சகோதரி டெலியா, Pegasos கிளினிக்கிற்கு பல முறை மின்னஞ்சல் அனுப்பிய பிறகே அவரது மரணம் உறுதிப்படுத்தப்பட்டது.
அன்னின் கடிதத்தில், “நீங்கள் இதைப் படித்தால், நான் இனி இல்லை. என் மகனைச் சந்தித்து சில கேள்விகள் கேட்கவேண்டும். எனது முடிவை மாற்ற யாராலும் முடியாது” என எழுதியுள்ளார்.
அன்னின் உடல்நிலையில் எந்த பிரச்சினையும் இல்லை, அவருக்கு எந்த தீவிர நோயும் இல்லை என அவரது சகோதரி தெரிவித்தார்.
Pegasos கிளினிக், அனைத்து செயல்களும் சுவிட்சர்லாந்து சட்டப்படி நடப்பதாக விளக்கம் அளித்துள்ளது. ஆனால் அன்னின் மரணம் அவரது குடும்பத்தை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |