பிரித்தானியாவுக்கு சுற்றுலா செல்லும் ஆசையிலிருக்கும் சுவிஸ் குடிமகனா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி
சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவுக்கு செல்ல விரும்புவோருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது பிரித்தானியா!
ஆம், சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியா செல்வோர், தாங்கள் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லையானாலும், பிரித்தானியாவுக்குள் நுழைந்ததும் இனி தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.
சுவிட்சர்லாந்தை தங்கள் பச்சை நாடுகள் பட்டியலில் சேர்க்க உள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
ஆகவே, பிரித்தானியா வரும் சுவிஸ் மக்கள், பிரித்தானியாவுக்குள் நுழைந்ததும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை. ஆனால், அவர்கள் பிரித்தானியா புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னும், பிரித்தானியா வந்தடைந்த இரண்டு நாட்களுக்குப் பின்னும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும், தங்களுக்கு கொரோனா இல்லை என்ற ஆதாரத்தைக் காட்டவேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களைப் பொருத்தவரை அவர்களுக்கு விதிகளில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. காரணம், தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு ஏற்கனவே தனிமைப்படுத்தலிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதி, வரும் திங்கட் கிழமை (ஆகத்து 30) காலை 5 மணி முதல் அமுலுக்கு வருகிறது.