தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம்: பிரித்தானிய அரசியல்வாதியின் யோசனை
பிரித்தானியாவில் வாக்களிப்பதை கட்டாயமாக்கவேண்டும் என ஆளும் கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.
வாக்களிக்காதவர்களுக்கு அபராதம்
லேபர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான Lord Foulkes என்பவர், முந்தைய தேர்தலில் வாக்களிப்பு சதவிகிதம் 60 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, அனைவரும் வாக்களிக்கும் வகையில், வாக்களிப்பதை கட்டாயமாக்கவேண்டும் என அவர் யோசனை முன்வைத்துள்ளார்.
அத்துடன், வாக்களிக்காதவர்களுக்கு 20 பவுண்டுகள் அபராதம் விதித்தால், வாக்களிப்போர் சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைவரும் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றாத பட்சத்தில், நமது அரசியல் பிரிவினை கொண்டதாக மாறும் அபாயம் உள்ளது என்று கூறும் அவர், ஏழைகளைத் தனிமைப்படுத்தி, பணக்காரர்களுக்கு சாதகமாக அமையும் அரசியல் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் விடயமாக நீடிக்காது என்கிறார்.
அவுஸ்திரேலியாவில் 1920களில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டதை சுட்டிக்காட்டும் Foulkes, அங்கு வாக்களிப்பு வீதம் தொடர்ச்சியாக 90 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது என்கிறார்.
ஆகவே, பிரித்தானியாவிலும் வாக்களிப்பதை கட்டாயமாக்கவேண்டும் என்கிறார் Foulkes.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |