லண்டனில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் யார்? பொலிஸார் வெளியிட்ட தகவல்
பிரித்தானியாவில் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த நபர், சில தினங்களுக்கு முன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெற்கு லண்டனில் எரித் பகுதியில் கடந்த புதன்கிழமையன்று ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தேம்ஸ் வேளி பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
அதனைத்தொடர்ந்து, இறந்தவர் யார், அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது குறித்து பல கோணங்களில் பொலிசார் விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) இறந்தவர் 46 வயதாகும் Duane Denny என்பது தெரிவந்தது. டென்னி கடந்த ஆகஸ்ட் 24-ஆம் திகதி முதல் காணாமல் போனதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BBC
அவரை கடந்த மூன்று வாரங்களாக தேடிவந்த பொலிஸார், அவர் காணாமல் போனது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்திவந்துள்ளனர்.
இதற்கிடையில், லண்டனில் கிடைத்த சடலம் குறித்து ஆய்வு செய்தபோது, அது டென்னி தான் என உறுதி செய்துள்ளனர். அவர் தனது வீட்டிலிருந்து 80 கிமீ தொலைவில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 47 வயதான ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர், அவர் காவலில் உள்ளார்.
BBC
டென்னியின் மரணம் தொடர்பாக Reading-ல் உள்ள Hadrian Walk பகுதியில் இருக்கும் ஒரு வீட்டை சுற்றிவளைத்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.