'கொலை' நகரமாக மாறிவரும் லண்டன்: ஒரு மணி நேரத்தில் 2 சிறுவர்கள் மரணம்
லண்டனில் ஒரு மணி நேர இடைவெளியில் 2 பதின்ம வயது சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரு கொலைகளுடன், 2021-ல் பிரித்தானிய தலைநகரில் பதின்வயதினரின் கொலைகளின் எண்ணிக்கை 30-ஆக அறிவிக்கப்பட்டது. இது லண்டனில் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம் என கூறப்படுகிறது.
வியாழக்கிழமை மாலை குரோய்டனில் உள்ள ஒரு பூங்காவில் ஒரு 15 வயது இளைஞன் குத்திக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் நடந்த 49 நிமிடங்களுக்குப் பிறகு, ஹில்லிங்டனில், யீவ்ஸ்லியில் உள்ள ஹீதர் லேனுக்கு அருகில் உள்ள Philpotts Farm Open Space-ல் நடந்த ஒரு தாக்குதலில் "பஞ்சர் காயத்தால்" பாதிக்கப்பட்ட 16 வயது இளைஞன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதுவரை, அதிகபட்சமாக 2008-ல் 29 ஆக இருந்த பதின்பருவக் கொலைகளின் எண்ணிக்கை, 2021-ல் 30 என்ற புதிய உச்சத்தைத் தாண்டியுள்ளது.
ஹில்லிங்டனில், இரவு 7.34 மணிக்கு லண்டன் ஆம்புலன்ஸ் சேவையினர் காயமடைந்த ஒரு ஆண் பற்றி பொலிஸாருக்கு புகார் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள், 16 வயது சிறுவன் துளையிடப்பட்ட காயத்தால் அவதிப்படுவதைக் கண்டனர். மருத்துவ உதவியாளர்கள் முயற்சி செய்த போதிலும், அவர் இரவு 8.25 மணியளவில் சம்பவ இடத்திலேயே இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
சிறுவனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகளால் அவர்களுக்கு ஆதரவளிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேபோல், Croydon-ல் நடந்த சம்பவம், ஆஷ்பர்டன் பூங்காவில் இரவு 7 மணிக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் அதிகாரிகள், ஆம்புலன்ஸ் சேவை வருவதற்குள் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு முதலுதவி அளித்தனர், ஆனால் அவர் இரவு 7.36 மணியளவில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
I am devastated by the deaths of a 15-year-old boy in Croydon and a 16-year-old boy in Hillingdon. My thoughts & prayers are with their families, friends & communities. I’m in close contact with @MetPoliceUK who are doing everything possible to bring those responsible to justice.
— Mayor of London, Sadiq Khan (@MayorofLondon) December 31, 2021
20 மைல்களுக்கு அப்பால் உள்ள இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு வழக்குகளிலும் தொடர்புடையவராக இதுவபிராய் யாரும் கைது செய்யப்படவில்லை, மேலும், சம்பவங்கள் தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளதாக லண்டன் பெருநகர் காவல்துறை தெரிவித்துள்ளது.
