லண்டனில் காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் பெண்: அடையாளம் வெளியிட்ட அதிகாரிகள்
பிரித்தானியாவில் காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் பெயர் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட பெண்
பிரித்தானியாவில் வடக்கு லண்டன் பகுதியில் காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் பெண் கோர்பியில்(Corby) வசிக்கும் 24 வயதான ஹர்ஷிதா பிரெல்லா(Harshita Brella) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பொலிஸார் வழங்கிய தகவலில், ஹர்ஷிதா பிரெல்லா குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும், இதனால் கொலை விசாரணையை தொடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன பெண்
புதன்கிழமை பொதுமக்கள் ஹர்ஷிதா பிரெல்லா குறித்த அக்கறையை எழுப்பிய பிறகு, அவரின் வீட்டை சோதனையிட்ட அதிகாரிகள் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவித்து அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் வியாழக்கிழமை வடக்கு லண்டன் பகுதியில் கார் ஒன்றில் இளம்பெண் ஒருவரும் சடலம் மீட்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை லெய்செஸ்டர் ராயல் மருத்துவமனையில் செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் ஹர்ஷிதா பிரெல்லா கொலை செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மூத்த விசாரணை அதிகாரி Johnny Campbell, ஹர்ஷிதா பிரெல்லாவுக்கு தெரிந்த நபர் யாரேனும் நடத்திய தாக்குதலாக இது இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் திறந்த சிந்தனையுடன் விசாரணையை நடத்தி வருவதாகவும், சந்தேகத்திற்கு இடமான தகவல்கள் ஏதேனும் தெரிந்து இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |