லண்டனில் நிர்வாணமாக சைக்கிள் பேரணி நடத்திய நூறுக்கணக்கான மக்கள்
லண்டன் தெருக்களில் இன்று இளம் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிச் சென்றனர்.
ஒவ்வொரு வருடமும் லண்டனில் நிகழ்த்தப்படும் உலக நிர்வாண பைக் ரைடு (World Naked Bike Ride-WNBR) கடந்த ஆண்டு கோவிட் தொற்றுநோய் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், 26 மாதங்கள் கழிந்தது இன்று இந்த நிகழ்வு மீண்டும் மத்திய லண்டனில் சிறப்பாக நடைபெற்றது. இதில் இளம் பெண்கள் உட்பட நூற்றுக்கனக்கான சைக்கிள் ஓட்டுபவர்கள் கலந்துகொண்டனர்.
விக்டோரியா பூங்காவிலிருந்து ஹைட் பார்க் வரை பலரும் முகக்கவசம் உட்பட ஒட்டுத்துணி இல்லாமல், புன்னகையுடன் சைக்கிள் ஓட்டிச்சென்றனர். பெரும்பாலான ரைடர்ஸ் முற்றிலும் நிர்வாணமாக இருந்தனர், ஆனால் சிலர் உள்ளாடை அணிந்தும், சிலர் உடம்பில் வர்ணங்களைப் பூசிக் கொண்டனர்.
அவர்கள் இவ்வாறு பிறந்தமேனியாக சென்றதற்கு குறிப்பிட்ட ஒற்றை காரணம் இல்லை, இதற்கு அவர்கள் சுற்றுச்சுழல் விழிப்புணர்வு, உடல் விழிப்புணர்வு, சைக்கிள் ஓட்டுவதற்கான விழிப்புணர்வு என பல காரணங்களை கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பங்கேற்கும் ஒரு நிர்வாண சைக்கிள் ஓட்டுநர் எரிக் காலின்ஸ் (Eric Collins) இது குறித்து கூறுகையில்: “கார் கலாச்சாரம், எண்ணெய் சார்பு, சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு சரியான உரிமைகள் மற்றும் உடல் சுதந்திரம் தொடர்பாக இந்த நிர்வாண சைக்கிள் பேரணி நடைபெறுகிறது.
தனிப்பட்ட முறையில், நான் ஐந்து முறை சைக்கிளில் சென்று விபத்துக்கு உள்ளான் - அவற்றில் இரண்டு தீவிரமானவை, அதனால் நான் உண்மையில் சைக்கிள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இங்கு வந்தேன்.
நாங்கள் அதை நிர்வாணமாகச் செய்வது அதிக கவனத்தை ஈர்ப்பதற்காகவே. ஏனென்றால் நாங்கள் எப்போதும்போல உடை அணிந்திருந்தால் யாரும் இதில் கவனம் செலுத்த மாட்டார்கள்" என்றார்.
இந்த World Naked Bike Ride 2003-ஆம் ஆண்டில் கார் சார்புநிலைக்கு எதிராக தொடங்கப்பட்டது மற்றும் அதன் பிறகு உலகெங்கிலும் உள்ள நகரங்களுக்கு பரவியது, வெறும் உடம்பில் சைக்கிள் ஓட்டுவது இப்போது லண்டன்வாசிகளுக்கு பழக்கமான காட்சியாக மாறிவிட்டது.