பிரித்தானிய உளவு விமானம் அருகே ரஷ்யாவின் ஏவுகணை வீசப்பட்டது ஏன்?
பிரித்தானியா உளவு விமானத்துக்கு அருகே ரஷ்யா ஏவுகணை வீசியதற்கு தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் கூறுகையில்,
பிரித்தானியா விமானப்படைக்கு சொந்தமான ஆர்சி-135 ரிவெட் ஜாயின்ட் உளவு விமானம் கருங்கடலுக்கு மேலே சர்வதேச வான் எல்லையில் இந்த மாதம் பறந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த ரஷிய சுக-27 போர் விமானங்களில் ஒன்று பிரித்தானியா விமானத்துக்கு அருகே ஏவுகணையை வீசியது.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட விளக்கத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது நடந்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே விமான ரோந்து பணியை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.