தயாராக இருக்க வேண்டும்! பிரித்தானியா அரசாங்கத்திற்கு நாட்டின் சுற்றுச்சூழல் செயலாளர் எச்சரிக்கை
பிரித்தானியா மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பால் சேர்க்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால், அரசாங்கம் விரைவாக செயல்பட வேண்டும் என்று நாட்டில் சுற்றுச்சூழல் செயலாளர் George Eustice தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் புத்தாண்டிற்கு முன்னதாக புதிய கட்டுப்பாடுகள் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகது என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஆனால், பிரித்தானியா அரசு இந்த முடிவை உடனடி மறுபரிசீலனையின் கீழ் வைக்க வேண்டும் என சுற்றுச்சூழல் செயலாளர் George Eustice எச்சரித்துள்ளார்.
நாட்டில் ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பதை ஒப்புக்கொண்ட Eustice, முந்தைய அலைகளைப் போல் மருத்துவமனைகள் மோசமாகப் பாதிக்கப்படாது என்பதற்கான சான்றுகள் இருப்பதாக கூறினார்.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து நிம்மதி அளிக்கும் தகவல் கிடைத்துள்ளது, அதாவது அங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நாட்களின் எண்ணிக்கையும் முந்தைய அலைகளை விட குறைவு என தெரியவந்துள்ளது.
எனவே, தற்போதைய சூழலில் பிரித்தானியா அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளே போதுமானது என நினைக்கிறோம்.
ஆனால், புதிய கட்டுப்பாடுகள் குறித்த முடிவை உடனடி மறுபரிசீலனையின் கீழ் வைக்க வேண்டும்.
ஏனென்றால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கத் தொடங்கினால், நாம் விரைவாக செயல்பட வேண்டும் என Eustice தெரிவித்துள்ளார்.