பிரித்தானியாவில் முதன்முறையாக கணிசமாக குறைந்த நிகர புலம்பெயர்தல்
UK net migration at lowest level since 1997: 1997ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக பிரித்தானியாவில் நிகர புலம்பெயர்தலின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான நிலவரப்படி, பிரித்தானியாவில் நிகர புலம்பெயர்தல் 77,000ஆக குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முதன்முறையாக குறைந்த நிகர புலம்பெயர்தல்
1997ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக பிரித்தானியாவில் நிகர புலம்பெயர்தல் இந்த அளவுக்கு குறைந்துள்ளது, (கோவிட் காலகட்டம் தவிர்த்து) இப்போதுதான்.

பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கையிலிருந்து, பிரித்தானியாவிலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கையைக் கழித்தால் வருவது நிகர புலம்பெயர்தல் எண்ணிக்கை.
அவ்வகையில், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் நிகர புலம்பெயர்தல் 944,000ஆக இருந்தது. அதுதான் பிரித்தானிய வரலாற்றிலேயே மிக உயர்ந்த நிகர புலம்பெயர்தல் எண்ணிக்கை.
தற்போது, அதாவது, 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில், அந்த எண்ணிக்கை 92 சதவிகிதம் குறைந்து 77,000 ஆகியுள்ளது.
இந்நிலையில், இந்த எண்ணிக்கை, பிரித்தானியாவில் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள் போதுமான அளவில் இருப்பதையே காட்டுவதாக பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாம் தெரிவித்துள்ளார்.
அதேபோல, உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூதும், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதில் கன்சர்வேட்டிவ் கட்சி கண்ட தோல்விகளுக்குப் பிறகு, லேபர் கட்சியின் கட்டுப்பாடுகள் வேலை செய்துள்ளன என்பதையே இந்த எண்ணிக்கை காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.