பிரித்தானியாவில் மின்சார வாகனங்களை விரும்பும் மக்கள்... எகிறும் விற்பனை
பிரித்தானியாவில் கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கூடுதலாக 25% கார்கள் விற்பனையாகி உள்ளதாக மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பிரித்தானியாவில் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பெருமளவு சரிந்தது.
இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு கார்களின் விற்பனை அதிகரித்து இருப்பதாகவும், கடந்த ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுக்கையில் இந்த ஜனவரி கார்களின் விற்பனையானது 25% அதிகரித்து இருப்பதாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தொழில்துறையின் இந்த ஆண்டிற்கான ஆரம்ப தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் அறிக்கையின் படி, தனியார் வாகனப் பதிவு 60% வரை உயர்ந்துள்ளதாகவும், 5தில் 1 என்ற விகிதத்தில் மின்சார சந்திக்கொண்டு இயங்கும் வாகனங்ககளை வாடிக்கையாளர்கள் வாங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கார்களின் விற்பனை அதிகரித்து இருப்பதால், வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியின் அளவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.