பிரித்தானியாவின் புதிய நிதி அமைச்சராக ஹான் ஹீலி நியமனம்: பதவி விலகும் முக்கிய அதிகாரிகள்
பிரித்தானியாவின் புதிய நிதி அமைச்சராக ஹான் ஹீலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவுக்கு புதிய நிதி அமைச்சர்
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்டி பர்னாம்(Andy Burnham) பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து அரசாங்கத்தில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாட்டின் புதிய நிதியமைச்சராக (Chancellor of the Exchequer) ஜான் ஹீலி(John healey) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக பிரித்தானியாவின் நிதி அமைச்சராக ரேச்சல் ரீவ்ஸ்(Rachel Reeves) இந்த பொறுப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் மூத்த அரசியல்வாதியும், கடந்த 1997ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் ஜான் ஹீலி கடந்த அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் ஜான் ஹீலி தற்போது நாட்டின் கருவூல தலைமை பொறுப்புக்கு முன்னேறியுள்ளார்.
ஜான் ஹீலி நியமனம் தொடர்பான அறிவிப்பை டவுனிங் ஸ்ட்ரீட் தங்களது அதிகாரப்பூர்வ X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

பதவி விலகும் முக்கிய அதிகாரிகள்
கடந்த ஆட்சியில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்து வந்த பல அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.
குறிப்பாக துணை பிரதமர் டேவிட் லாமி மற்றும் வீட்டுவசதி, சமூகங்கள் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டீவ் ரீட் ஆகியோர் இதில் அடங்குவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |