பிரித்தானியாவில் புதிய பலசரக்கு வரி., மளிகை செலவு 56 பவுண்டு வரை அதிகரிக்கும் அபாயம்
பிரித்தானியா மக்களின் மாதாந்திர மளிகை செலவு 56 பவுண்டு வரை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியா குடும்பங்கள் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதுடன், புதிய பலசரக்கு வரி (grocery tax) காரணமாக கூடுதல் செலவுகளைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
புதிய விதிகள்
நாடு முழுவதும் Net Zero குறிக்கோள்களை அடைவதற்காக, 2025 முதல் Extended Producer Responsibility (EPR) எனப்படும் புதிய விதிகள் அறிமுகமாகின்றன.
இந்த விதிகளின் மூலம், சுப்பர் மார்க்கெட்டுகளும் உற்பத்தியாளர்களும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்களுக்கு £485 வரை கட்டணம் விதிக்கப்படும்.
பிளாஸ்டிக் பேக்கேஜிங்கின் மாறாக, காகித பேக்கேஜிங் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களுக்கு கட்டணம் குறைவாக இருக்கும். இதன் மூலம் மக்காத குப்பையை குறைத்து மறுசுழற்சியை மேம்படுத்துவதே அரசின் நோக்கமாகும்.
மளிகை செலவு ரூ.20,000 வரை அதிகரிக்கும் அபாயம்
இந்த EPR விதிகள் காரணமாக, விதிக்கப்படும் வரியால், பிரித்தானிய குடும்பங்களின் மாதாந்திர உணவுப் பொருள் செலவுகளில் £28 முதல் £70 வரை கூடுதலாக தாக்கம் ஏற்படுத்தும் என அரசின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பல்வேறு சூழ்நிலைகளைப் பொறுத்து மளிகை பில்களில் சராசரியாக £28 முதல் £56 (இலங்கை பணமதிப்பில் ரூ.20,000 வரை) அதிகரிக்க வழிவகுக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விதிகள் 2025 ஜனவரியில் அமலுக்கு வரும், ஆனால் அவை சுப்பர் மார்க்கெட் விலைகளில் முழுமையாக எதிரொலிக்க சில மாதங்கள் ஆகும்.
கண்டனம்
அரசின் இந்த முடிவுகள் குறித்து பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நெட் ஜீரோ கண்காணிப்பு குழுவின் தலைவரான லார்டு மெகின்லே, "இந்த விதிகள் திடீரென அறிமுகமாகின்றன. இவை ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகுந்த நிதி சுமையை ஏற்படுத்தும்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், இந்த மாற்றங்கள் 21,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் மறுசுழற்சி துறையில் £10 பில்லியன் முதலீடுகளை உருவாக்கும் என Defra (Department for Environment Food and Rural Affairs) துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய விதிகள் அதிக செலவுகளையும், மீற முடியாத நிதிசுமையையும் ஏற்படுத்தும் என்றாலும், சுத்தமான சூழலுக்கு எடுத்துவரப்படும் நீண்டகால மாற்றங்களின் அடிப்படையில் துரித முன்னேற்றமாக கருதப்படுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
uk New grocery tax rules, uk supermarket bills, UK 2025 Tax rules