பிரான்சில் இருந்து இனி பிரித்தானியா வருவோர்க்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் அமுலாகும் புதிய சட்டம்
பிரான்சில் இருந்து பிரித்தானியா வருபவர்களுக்கு கடவுச்சீட்டு கட்டாயம் என்ற சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இன்று முதல் பிரான்சில் இருந்து வருவோர் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பிரான்சில் இருந்து இனி பிரித்தானியா வந்தால் கடவுச்சீட்டு கண்டிப்பாக வேண்டும்.
இதில் பிரித்தானியா குடியுரிமையாளர்களைத தவிர, மற்ற எந்த ஒரு ஐரோப்பிய நாட்டினராக இருந்தாலும், கடவுச்சீட்டு கட்டாயம் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
பிரான்சில் அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம், அதே சமயம் கடவுச் சீட்டு வேண்டும் என்றால், அதற்கு விண்ணப்பிக்க பெரியவர்களுக்கு 68 யூரோக்களும், சிறுவர்களுக்கு 42 யூரோக்களும், 15 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு 17 யூரோக்களும் வசூலிக்கப்படுகிறது.
பிரித்தானியா பிரெக்சிட்டுக்கு பின் பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக பிரித்தானியாவில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் தற்போது புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டம், மேலும் எண்ணிக்கையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.