பிரித்தானியாவில் ஆபாச தளங்களை கட்டுப்படுத்த புதிய மசோதா!
சிறார்கள் ஆபாச தளங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்த புதிய ஓன்லைன் பாதுகாப்பு மசோதாவை பிரித்தானியா நிறைவேற்றியுள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் பிப்ரவரி 7, திங்கட்கிழமை அன்று ஓன்லைன் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியது. இந்த புதிய மசோதா இணையத்தில் சிறுவர்களுக்கு அணுகலை அனுமதிக்கும் ஆபாச இணையதளங்களை தடைசெய்யும்.
அதற்காக கிராஃபிக் உள்ளடக்கத்தை அணுகுவதில் இருந்து சிறார்களைத் தடுக்கும் கடுமையான சரிபார்ப்பு தொழில்நுட்பங்களை அரசு பயன்படுத்தவுள்ளது.
ஒன்லைன் ஆபாச தளங்களிலிருந்து பிரித்தானியக் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்பான இணைய தினத்தை முன்னிட்டு பிரித்தாயாவின் டிஜிட்டல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் MP கிறிஸ் பிலிப் இந்தச் சட்டத்தை இயற்றியுள்ளார்.
இதன் மூலம், பிரித்தானியா முழுவதிலும் உள்ள பெரியவர்கள் பாதுகாப்பான வயதுச் சரிபார்ப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மட்டுமே அத்தகைய தளங்களை அணுக முடியும்.
அது அவர்கள் கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்களா என்பதையும், மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களா என்பதையும் சரிபார்க்கும் ள். அரசாங்கத் தரவுகளுக்கு எதிராக அவர்களின் வயதை உறுதிப்படுத்தும் மூன்றாம் தரப்பு சேவையை பிரித்தானிய அரசாங்கம் பயன்படுத்தவுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள புதிய ஓன்லைன் பாதுகாப்புச் சட்டங்களின் மூலம், இப்போது ஆபாசங்கள், வெறுக்கத்தக்க குற்றம், மோசடி மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் விற்பனை உள்ளிட்ட பல குற்றங்களை கடுமையாக கட்டுப்படுத்தும் என கூறப்படுகிறது.
புதிய சட்டத்தை ஆபாச தளங்கள் செயல்படத் தவறினால், பிரித்தானிய அரசாங்கம், Ofcom என்ற ஒரு சுயாதீன ஒழுங்குமுறை நிறுவனத்தை நியமிக்கும், இது சட்டத்தை மீறும் பட்சத்தில், அவர்களின் ஆண்டு உலகளாவிய வருவாயில் 10 சதவிகிதம் அபராதம் விதிக்கும்.
நாடு முழுவதும் அவர்களை அணுகுவதைத் தடுக்கும் அதிகாரத்தையும் பிரித்தானிய அரசாங்கம் வைத்திருக்கும்.
Ofcom உடன் ஒத்துழைக்கத் தவறினால், இந்த வலைத்தளங்களின் முதலாளிகளும் குற்றவியல் பொறுப்புக்கு ஆளாக நேரிடும் என்று அமைச்சர் MP கிறிஸ் பிலிப், டவுனிங் ஸ்ட்ரீட் செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.