பிரித்தானிய பிரதமரான பின் லிஸ் ட்ரஸ் முதன்முதலில் எந்த வெளிநாட்டு தலைவருடன் பேசினார் தெரியுமா?
பிரித்தானிய பிரதமரான பின்னர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசிய லிஸ் ட்ரஸ்.
உக்ரைனுக்கு செல்வதற்கான அழைப்பை ஏற்றார்.
பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்ற பின்னர் லிஸ் ட்ரஸ் முதன் முதலில் எந்த வெளிநாட்டு தலைவருடன் பேசினார் என்பது குறித்து தெரியவந்துள்ளது.
அதன்படி உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன் தான் பேசியிருக்கிறார். இருவருக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது உக்ரைனுக்குச் செல்வதற்கான அழைப்பை ஏற்றார் டிரஸ்.
மேலும் ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கான தனது ஆதரவை மீண்டும் தெரிவித்தார்.
eupoliticalreport
இது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான உறுதியான ஆதரவை தெரிவிக்க பிரதமர் ட்ரஸ், ஜெலன்ஸ்கியுடன் பேசினார்.
எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும், விரைவில் உக்ரைனில் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்திப்பதற்கான அழைப்பை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் பிரதமர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Robert Perry/EPA