லண்டனில் பயங்கரம்! பெண் உட்பட 5 பேருக்கு கத்திக்குத்து..
லண்டனில் நிலத்தடி ரயில் நிலையத்தில் நடந்த சண்டையில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் சரமாரியாக கத்தியால் தாக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம், பெருநகர லண்டனில், ஹாரோ கவுன்சிலில் உள்ள சிவிக் சென்டர் அருகே உள்ள நிலத்தடி ரயில் நிலையத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் நடந்துள்ளது.
இந்த கொடூர தாக்குதலை ஒரு டீனேஜ் அல்லது 20 வயதுக்குட்பட்ட ஒரு இளைஞர் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு உடனடியாக பொலிஸார் மற்றும் லண்டனின் ஏர் ஆம்புலன்ஸ் விரைந்ததையடுத்து, படுகாயம் அடைந்த ஐவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமணியில் சிகிச்சைக்கு ணைப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை என்றும், இது குறித்து தகவல் அறிந்தவர்கள் மற்றும் ஆதாரக் காட்சிகள் கொண்டவர்கள் தங்களை அணுகுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.