புதிய Covid-19 தடுப்பூசியை அங்கீகரித்த பிரித்தானியா!
பிரித்தானியாவில் ஐந்தாவதாக ஐப்போது புதிய Covid-19 தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்த ஏற்கெனெவே Moderna, Oxford-AstraZeneca, Pfizer/BioNTech மற்றும் Janssen ஆகிய நான்கு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பிரித்தானியாவின் சுகாதார சீராக்கியான மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான Novavax எனும் கோவிட்-19 தடுப்பூசிக்கு புதிதாக அங்கீகாரம் அளித்துள்ளது.
Nuvaxovid நிறுவனம் உருவாக்கிய இந்த தடுப்பு மருந்து, பிரித்தானியாவில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட ஐந்தாவது தடுப்பூசி ஆகும்.
இப்போது, இந்த தடுப்புமருந்தை நாட்டின் தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதுவதற்கு தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான சுயாதீன கூட்டுக் குழுவால் பரிசீலிக்கப்படும்.
கடந்த ஜனவரியில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், கோவிட் நோய்க்கு எதிராக இந்த தடுப்பூசி 89.3 சதவீதம் பலனளிப்பதாக காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, Stockton-on-Tees-ல் உற்பத்தி செய்யப்படும் இந்த மருந்தின் 60 மில்லியன் டோஸ்களுக்கான ஆர்டரை பிரித்தானிய அரசு பெற்றுள்ளது.