மன்னரானால் எப்படிப்பட்ட மன்னராக இருப்பீர்கள்: இளவரசர் வில்லியமின் அசத்தல் பதில்!
எதிர்காலத்தில் நான் பிரித்தானியாவின் மன்னர் ஆனால் அரச குடும்பத்தை நவீனத்துவம் படுத்தும் முயற்சியில் ஈடுபடுவேன் என இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
அரச குடும்பத்தில் அரசராகும் வரிசையில் இரண்டாவது இடத்தில் இளவரசர் வில்லியம் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ராணியின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு பிபிசியின் ராயல் நிருபர் நிக்கோலஸ் விட்சல் எடுத்த நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இளவரசர் வில்லியமிடம், நீங்கள் வரும்காலத்தில் அரசர் ஆனால் எப்படிப்பட்ட அரசராக இருப்பிர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த இளவரசர் வில்லியம் அரச குடும்பம் நவீனத்துவத்துடன் கூடிய வளர்ச்சியை அடையவேண்டும் என நினைக்கிறேன். மேலும் அது தற்காலத்துடன் தொடர்பு உடையதாகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதை எப்படி செய்யப்போகிறேன் என்பதே என்னுடைய மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
அதற்கு 20 வருடங்களோ, 40 வருடங்களோ அல்லது 60 வருடங்களோ கூட ஆகலாம். ஆனால் அது எப்போது என்று எனக்கு தெரிவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
நான் நிச்சியமாக அதற்காக விழித்திருக்க போவதும் இல்லை அதை நம்பி இருக்கப்போவதும் இல்லை என தெரிவித்துள்ளார்.