பிரித்தானியாவில் உறவுமுறை திருமணம்., சர்ச்சையை கிளப்பியுள்ள NHS வழிகாட்டுதல் ஆவணம்
பிரித்தானியாவில் NHS வெளியிட்ட வழிகாட்டி ஆவணம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதில், First Cousin marriage எனப்படும் சொந்த அத்தை அல்லது மாமன் பிள்ளைகளை திருமணம் செய்து கொள்வது நல்லது என்பது போன்ற அறிவுரையை வழங்கியுள்ளது. இந்த கருத்து பிரித்தானியாவில் தற்போது பெரும் விமர்சனத்தை எதிர்கொள்கிறது.
இவ்வாறு முறைப்பெண் அல்லது முறை மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்வது உடல்நல அபாயங்களை கொண்டுள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுபோன்ற திருமணம் செய்பவர்களின் குழந்தைகள் cystic fibrosis அல்லது thalassaemia போன்ற மரபணு கோளாறுகளால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், Bradford-ல் NHS ஊழியர் ஒருவர், ஒரு உறவுமுறை உள்ளவரை திருமணம் செய்து கொள்வது ஒரு கலாச்சார நடைமுறை என்று விவரித்துள்ளதால் இந்த சர்ச்சை கிளம்பியுள்ளது.
NHS இங்கிலாந்தின் மரபணு கல்வி திட்டத்தால் (genomics education programme) வெளியிட்ட வழிகாட்டுதலில், பிரிட்டிஷ்-பாகிஸ்தானிய சமூகத்தில் பொதுவாக காணப்படும் இந்த first-cousin marriage, அவர்களின் குழந்தைகளுக்கு மரபணு பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்து இருக்கிறது என குறிப்பிட்டுவிட்டு, இதுபோன்ற உறவுமுறை திருமணங்களை தடை செய்வதை விட, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்ற பொது சுகாதார நடவடிக்கைகளை பரிந்துரைக்கிறது.
மேலும், இந்த first-cousin marriage நடைமுறையை சட்டவிரோதமாக்குவது சமூகங்களைக் களங்கப்படுத்தக்கூடும் என்று கூறியுள்ளது.
இந்த கருத்து பிரித்தானியாவில் உள்ள கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்சர்வேட்டிவ் எம்.பி. ரிச்சர்ட் ஹோல்டன், "இது ஒரு தீங்கு விளைவிக்கும் கலாச்சார நடைமுறை. NHS இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
மேலும், உறவுமுறை திருமணம் செய்வது குடியேற்றத்திற்கு பின்வாசல் வழியாக பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பிரித்தானியாவில் எட்டாம் ஹென்றி காலத்திலிருந்து உறவுமுறை திருமணம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுவருகிறது. ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், இந்த நடைமுறை மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK cousin marriage outrage, first cousin marriage, NHS guidance