பிரித்தானியாவில் இனி இதற்கு சாத்தியமே இல்லை! உயர்மட்ட விஞ்ஞானி கணிப்பு
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மேலும் ஊரடங்கு விதிப்பது என்பது "சாத்தியமில்லை" என்று அரசாங்கத்தின் உயர்மட்ட அறிவியல் ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் COVID-19 தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், சராசரி நோய்த்தொற்று விகிதம் குறைந்துவிட்டது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதனால், பிரித்தானியாவில் இந்த குளிர்காலத்தில் மீண்டும் ஒரு பொதுமுடக்கம் என்பது நிச்சம் தேவை இருக்காது என அரசின் உயர்மட்ட மருத்துவ நிபுணர் பேராசிரியர் நீல் பெர்குசன் (Neil Ferguson) கூறியுள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் முதல் அனைத்து துறைகளும் எப்பபோதும் போல் இயங்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கோவிட் தொற்றின் அடுத்த அலை தாக்கக்கூடும், தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்ககே கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளை போல், சில கடுமையான கட்டுப்பாடுகள், பொதுமுடக்கம் என தீவிர நடவடிக்கைகள் இல்லாமல், இதை நிர்வகிக்க முடியும் என்று விஞ்ஞானி நீல் பெர்குசன் நம்பிக்கையுடன் உள்ளனர்.
மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்துவதன் மூலம், வரக்கூடிய நோய்த்தொற்றை எளிதாக நிர்வகிக்க முடியும் என கூறுகிறார்.
எவ்வாறாயினும், வைரஸ்கள் புதிய வகையாக உருமாற்றம் அடைந்து, வீரியமாக பரவுவது தெரியவந்தால் அவற்றை நிராகரிக்க முடியாது, அந்த நிலைமையையும் சமாளிக்கக்கூடிய எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் கூறினார்.