99 வயது பெண்மணியை ஏமாற்றி 32 கோடி ரூபாய் மோசடி செய்த செவிலியர்

United Kingdom
By Balamanuvelan Oct 16, 2026 11:50 AM GMT
Report

Nurse stole £750k from 99 year old woman: செவிலியர் ஒருவர், 99 வயது பெண்மணி ஒருவரை ஏமாற்றி அவரிடமிருந்து 770,000 பவுண்டுகளை மோசடி செய்துள்ளார்.

வேல்ஸ் நாட்டில் முதியோர் இல்லம் ஒன்றின் துணை மேலாளராக பணியாற்றிய செவிலியர் ரெபேக்கா பர்வுட்.

32 கோடி ரூபாய் மோசடி

2017ஆம் ஆண்டு, உறவினர்கள் யாருமற்ற பெண்மணி ஒருவர் கீழே விழுந்ததில் பலத்த அடிபட, அவருக்கு உதவியாக இருந்துள்ளார் ரெபேக்கா. 

99 வயது பெண்மணியை ஏமாற்றி 32 கோடி ரூபாய் மோசடி செய்த செவிலியர் | Uk Nurse Stole 32Cr From 99 Year Old Woman

அந்த பெண்மணியை பாட்டி என அழைத்து அவரை கவனித்துக்கொண்டதால், அவருக்கு ரெபேக்காவை பிடித்துப்போக, அதை பயன்படுத்திக்கொண்ட ரெபேக்கா, மெல்ல அவரிடமிருந்து பணம் பறிக்கத் துவங்கியுள்ளார்.

தனக்கு யாருமில்லாததால், தான் இறந்த பிறகு தன் பணம் அரசாங்கத்துக்குப் போய்விடக்கூடாது என்று கூறிய அந்தப் பெண்மணி, வாரந்தோறும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்குமாறும் ரெபேக்காவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவிட் போன்ற கொள்ளை நோய் ஏதாவது வருமானால், லாக் டவுன் அறிவிப்பார்கள். அப்போது நீங்கள் என் வீட்டில் வந்து வாழலாம் என்று கூறி, அவரிடம் பணம் வாங்கி தனது வீட்டை பெரிதாக்கிக் கட்டியுள்ளார் ரெபேக்கா. 

இங்கிலாந்தில் இரவு நேரத்தில் பூங்காவுக்கு சென்ற இந்திய இளைஞர்கள் சந்தித்த அதிர்ச்சி

இங்கிலாந்தில் இரவு நேரத்தில் பூங்காவுக்கு சென்ற இந்திய இளைஞர்கள் சந்தித்த அதிர்ச்சி

பின்னர், வெளியே எங்காவது செல்ல உதவும் என்று கூறி ஒரு காரும், ஒரு கேரவனும் வாங்கியுள்ளார் ரெபேக்கா.

இப்படியே, ஐந்து ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக 370,000 பவுண்டுகளை ஏமாற்றி வாங்கிய ரெபேக்கா, பின்னர் அந்தப் பெண்மணியின் வீட்டையும் தன் பெயருக்கு மாற்றி எழுதி வாங்கியுள்ளார்.

அந்த வீட்டின் மதிப்பு 400,000 பவுண்டுகள். ஆக, மொத்தம் 770,000 பவுண்டுகளை ஏமாற்றிப் பறித்துள்ளார் ரெபேக்கா.

770,000 பவுண்டுகள் என்பது இலங்கை மதிப்பில் 32,94,86,925.00 ரூபாய் ஆகும்!

இந்நிலையில், வங்கி ஊழியர்களுக்கும், அந்தப் பெண்மணியை கவனித்துக்கொள்ள வந்த மற்றொரு செவிலியருக்கும் சந்தேகம் ஏற்படவே, பொலிசாருக்கு புகார் செல்ல, விசாரணையில் ரெபேக்கா செய்த பயங்கர மோசடி தெரியவந்துள்ளது.

விடயம் என்னவென்றால், உண்மை தெரியவந்தும், அந்தப் பெண்மணி, அன்பையும் நட்பையும் காட்டி, ரெபேக்கா மீது புகாரளிக்க விரும்பவில்லை.

ஆனாலும், ரெபேக்கா தொடர்பில் பிரித்தானிய செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவ மன்றத்திடம் புகார் சென்றுள்ளது.

அதைத் தொடர்ந்து, ரெபேக்கா தொடர்ச்சியான மற்றும் திட்டமிட்ட வற்புறுத்தல் மற்றும் சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக செவிலியர் மற்றும் மகப்பேறு மருத்துவ மன்றம் முடிவு செய்தது.

அவரது செயல்களைக் கடுமையான முறைகேடு எனக் கருதிய மன்றம், ரெபேக்கா பிரித்தானியாவில் செவிலியராகப் பணியாற்றத் தடை விதித்துள்ளதுடன், செவிலியர் பதிவேட்டிலிருந்து அவரது பெயரை நீக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US