பிரித்தானியாவில் 13 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து: பொலிஸார் வழங்கிய வாக்குறுதி
பிரித்தானியாவில் 13 வயது சிறுவன் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
13 வயது சிறுவன் உயிரிழப்பு
கத்திக்குத்து தாக்குதலில் 13 வயது சிறுவன் கொல்லப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு Oldbury-வின் West Midlands சந்தை நகரத்தில் Lovett Avenue பகுதியில் உள்ள வீட்டிற்கு பொலிஸார் மாலை 4 மணியளவில் அழைக்கப்பட்டனர்.
மருத்துவ குழுவினர் தேவையான சிகிச்சை வழங்கியும் சிறுவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
மேலும் துப்பறியும் அதிகாரிகள் குழு விசாரணையை நடத்தி வருவதாக வெஸ்ட் மிட்லேண்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார்
இந்நிலையில் துப்பறியும் கண்காணிப்பாளர் Shaun Edwards, இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை விரைவில் கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் எங்களின் சிறப்பு அதிகாரிகள் சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |