லண்டனில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒமைக்ரான் ஆதிக்கம் செலுத்தும்! வெளியான எச்சரிக்கை தகவல்
பிரித்தானியாவில் ஒமைக்ரான் கொரோனா வைரஸால் நாள் ஒன்றிற்கு 200000 பேர் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது.
குறிப்பாக பிரித்தானியாவில் இதன் பாதிப்பு தீவிரமாகவே உள்ளது. இதனால் அங்கு பயணக்கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா விதிமுறைகளும், ஒவ்வொரு வாரமும் அதிகரித்து வருகிறது.
தற்போது வரை பிரித்தானியாவில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் உயிரிழந்திருப்பதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதிபடுத்தினார்.
இந்நிலையில், இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் பேசிய சுகாதார செயலாளர் Sajid Javid, பி.சி.ஆர் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
இன்று 1,576 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதாகவும், கடந்த 48 மணி நேரத்திற்குள் லண்டனில் இதன் விகிதம் அதிகரித்துள்ளதாக எச்சரித்தார். தற்போது வரை பிரித்தானியாவில் ஒமைக்ரானால் 4713 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
மேலும், இங்கிலாந்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும், லண்டனில் இது 44 சதவீதத்திற்கும்அதிகமாக இருப்பதை நாங்கள் ஏற்கனவே பார்த்துள்ளோம். அடுத்த 48 மணி நேரத்தில் இது தலைநகர் லண்டனில் ஆதிக்கத்தை செலுத்தும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் UK Health Security Agency மதிப்பீட்டின்படி, நாள் ஒன்றிற்கு பிரித்தானியாவில் உண்மையாக சுமார் 200,000 பேர் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,