பிரித்தானியா ஒரு Omicron Tsunami-ஐ எதிர்கொள்கிறது: எச்சரிக்கும் நிக்கோலா ஸ்டர்ஜன்
பிரித்தானியா தற்போது Omicron வைரசின் சுனாமியை எதிர்கொள்வதாக, ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் கூறியுள்ளார்.
இன்னும் சில நாட்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய Delta வகை வைரசை விட Omicron வைரஸ் ஆதிக்க வைரஸாக மாறலாம் என Nicola Sturgeon எச்சரித்துள்ளார்.
ஸ்காட்லாந்தில் மட்டும் இதுவரை 110 பேருக்கு ஒழிகிறேன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது வெறும் ஆரம்பபப் புள்ளி தான் என கூறிய நிக்கோலா ஸ்டர்ஜன், கொரோனா தொற்று நோயின் புதிய அலை தொடங்க போகிறது என அவர் கணித்துள்ளார்.
இந்நிலையில், அவர் ஸ்காட்லாந்தில் சுய-தனிமைப்படுத்தல் வழிகாட்டுதல்களில் மாற்றங்களை அறிவித்தார், மேலும் பணியிட கிறிஸ்துமஸ் விருந்துகளை ரத்து செய்யுமாறு மக்களை வலியுறுத்தினார்.
ஸ்டர்ஜன் மேலும் கூறுகையில், நாளை முதல், எந்தவொரு கோவிட் நோயாளிகளின் குடும்பத் தொடர்புகளும் தடுப்பூசி நிலையைப் பொருட்படுத்தாமல் மற்றும் எதிர்மறையான PCR சோதனையைப் பெற்றாலும் கூட 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.
அதேபோல், கோவிட் நோயாளிகளின் தொடர்பில் இருந்த குடும்பம் அல்லாத நபர்களும், எதிர்மறையான PCR சோதனை மற்றும் இரண்டு தடுப்பூசி டோஸ்களைப் பெற்றிருந்தால் கூட தனிமைப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.