கொரோனா தடுப்பூசி: பிரித்தானியாவின் செயலால் ஏழை நாடுகளின் நிலை என்னவாகும்?
ஏழை நாடுகள் கொரோனா தடுப்பூசி பெற போராடிவரும் நிலையில், பிரித்தானியா தேவைக்கு அதிகமாக தடுப்பூசியை வாங்கப் போவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அதாவது, தேவையை விட கூடுதலாக 210 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசிகளை பிரித்தானியா பெற போவதாக ஆய்வில் தெரியவந்ததை தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பகுப்பாய்வு நிறுவனமான Airfinity-ன் தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டின் இறுதியில் சுமார் 467 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் பிரித்தானியாவுக்கு வழங்கப்பட உள்ளன என தெரியவந்துள்ளது.
இன்னும் இளைஞர்களுக்கு தடுப்பூசி போட மற்றும் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கும் 3வது டோஸ் வழங்க பிரித்தானியாவுக்கு 256.6 மில்லியன் டோஸ் மட்டுமே தேவைப்படும் என Airfinity குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானியாவிடம் கூடுதலாக உள்ள தடுப்பூசி டோஸ்கள் மூலம் உலகில் குறைந்த அளவில் தடுப்பூசி போட்ட 10 நாடுகளில் உள்ள 211 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடலாம் என்று உலக நாடுகளுக்கு தடுப்பூசியை சமமாக விநியோகம் செய்வதற்கு பிரச்சாரம் செய்து வரும் The Global Justice Now group கூறியுள்ளது.
The Global Justice Now group அமைப்பின் இயக்குநர் நிக் டார்டன், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் போராடி வருவதற்கு மத்தியில், பிரித்தானியா மூன்றாவது டோஸை வழங்கி இளைஞர்களுக்கு தடுப்பூசி போடத் தயாராகி வருகிறது.
இது ஒவ்வொரு நாளும் கொரோனாவால் இறக்கும் ஆயிரக்கணக்கானோரை அவமதிக்கும் செயல் என்று கூறினார்.