நிறைவேற வாய்ப்பில்லாத திட்டத்திற்கு மேலும் ரூ 1,051 கோடியை செலவிட்ட ரிஷி சுனக்
புகலிடக் கோரிக்கையாளர்களை கிழக்கு ஆபிரிக்க நாட்டிற்கு இடமாற்றம் செய்யும் திட்டத்திற்கு ஏற்கனவே 140 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் 100 மில்லியன் பவுண்டுகளை( இந்திய மதிப்பில் ரூ 1051 கோடி) ருவாண்டாவுக்கு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ருவாண்டாவுக்கு இடமாற்றம் செய்தல்
சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் வகையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முன்னெடுத்துள்ள திட்டத்தான் ருவாண்டாவுக்கு இடமாற்றம் செய்தல். ஆனால் 2022ல் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை ஒருவர் கூட ருவாண்டாவுக்கு அனுப்பப்படாத நிலையில், சட்ட சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
@reuters
மட்டுமின்றி, கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டமானது தற்போது சுனக்கின் தலைமைக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. மேலும், அவரது குடிவரவு அமைச்சர் இந்த வாரம் ராஜினாமா செய்தார். அத்துடன் அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தலையும் பிரித்தானிய மக்கள் சந்திக்க உள்ளனர்.
பிரித்தானிய அரசாங்கம் ருவாண்டாவுக்கு அனுப்பிய 240 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல், லண்டனும் ருவாண்டாவிற்கு அடுத்த ஆண்டு கூடுதலாக 50 மில்லியன் பவுண்டுகளை வழங்க உள்ளது.
ஒருபோதும் இழப்பல்ல
குறித்த திட்டத்திற்கான செலவுகள் எகிறி வரும் நிலையில், இந்த திட்டமானது முற்றிலும் தோல்வியை சந்திக்கும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மட்டுமின்றி, சொந்த கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கடும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.
@reuters
ஆனால் ருவாண்டாவுக்கு அளித்துள்ள 240 மில்லியன் பவுண்டுகள் என்பது பிரித்தானியா அரசாங்கத்திற்கு ஒருபோதும் இழப்பல்ல எனவும், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான குடியிருப்புகளுக்கு செலவிடப்படும் தொகையானது இனி சேமிப்பாக மாறும் எனவும் பதிலளிக்கப்பட்டுள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக நாளும் 8 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானியா செலவிட்டு வந்துள்ளதாகவும், இனி அப்படியான செலவுகள் இருக்காது என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |