அமெரிக்க விசா விதிகளை மீறியதால் சிக்கலில் பிரித்தானிய பெண்! ட்ரம்பால் கதறும் பெற்றோர்

Donald Trump United States of America Tourist Visa
By Sivaraj Mar 12, 2025 02:01 PM GMT
Report

 பிரித்தானியாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் அமெரிக்க விசா விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், அவரது பெற்றோர் கண்ணீருடன் அச்சத்தில் உள்ளனர். 

குடியேற்றத் தடுப்பு நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்றத் தடுப்பு நடவடிக்கையாக விசா முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்தார்.

அதன்படி, நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், பிரித்தானியாவைச் சேர்ந்த 28 வயது பெண்ணொருவர் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத சிக்கலில் உள்ளார்.

ரெபெக்கா பர்க் என்ற பிரித்தானியப் பெண், அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு தனியாக சுற்றுலாப் பயணியாக வந்தார். 

uk parents sad for daughter stuck in usa

அவர், கடந்த பிப்ரவரி 26ஆம் திகதி கனேடிய எல்லையைக் கடக்க முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

வாஷிங்டனின் டகோமாவில் உள்ள மையத்தில் இரண்டு வாரங்கள் அடைத்து வைக்கப்பட்ட ரெபெக்கா, ஒரு மாதம் வரை அங்கேயே செலவிட நேரிடும் என அவரது பெற்றோர் தற்போது அஞ்சுகின்றனர். 

மகளின் விடுதலைக்காக

ரெபெக்காவின் தந்தை பால் பர்க் (60), தாய் ஆண்ட்ரியா இருவரும் தங்கள் மகளின் விடுதலைக்காக மன்றாடுகின்றனர். தினசரி தொலைபேசியில் அவருடன் பேசும்போது வருத்தத்தில் இருப்பதை உணர்வதாக கவலை தெரிவித்துள்ளனர். 

uk parents sad for daughter stuck in usa

மேலும் பால் பர்க் கூறுகையில், "நீங்கள் அவளை முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் வைக்கப்போகிறீர்கள் என்றால், நாளை அவள் ஏன் விமானத்தில் ஏறக்கூடாது? வீட்டிற்கு செல்ல விரும்பும் பிரித்தானிய சுற்றுலாப் பயணியாக இருந்தபோதும், அவள் ஒரு சட்டவிரோத வெளிநாட்டவராக வகைப்படுத்தப்பட்டுள்ளார். அவள் அங்கே தங்க விரும்பவில்லை" என்றார்.

ஒரு காகித வேலை குழப்பம்

அத்துடன் "முன்னுரிமை பட்டியலில் தான் முன்னேறி வருவதாக ICE அதிகாரி கூறியதில் அவள் சற்று நிம்மதியடைந்தது போல் இருந்தது. இந்த பயங்கரமான சூழ்நிலையில் அவள் சிக்கியிருப்பதால் விடுதலையானது போல், கிட்டத்தட்ட மகிழ்ச்சியான கண்ணீர் இருந்தது. நாங்கள் அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறோம்.

இது ஒரு காகித வேலை குழப்பம். அவள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலைமைகளை எங்களால் நம்ப முடியவில்லை. இது ஒரு சிறை சூழல். ஆரம்பத்தில் அவள் ஒரு இளம் பெண்ணாக தனியாக பயணம் செய்கிறாள் என்று நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம்.

ஆனால் அவள் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு சென்றதாக எங்களிடம் கூறியபோது, ஒரு பிரித்தானிய நபர் தனியாக பயணம் செய்வதற்கு இது மிகவும் பாதுகாப்பான இரண்டு நாடுகள் என்று நாங்கள் நினைத்தோம்" என தெரிவித்தார். 

uk parents sad for daughter stuck in usa

அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) ரெபெக்கா நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அமெரிக்காவிற்கான புதிய பிரித்தானிய தூதர் பீட்டர் மண்டேல்சன் உதவியால் அவரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க முடியும் என்று பால் பர்க் நம்புகிறார்.     

uk parents sad for daughter stuck in usa  

uk parents sad for daughter stuck in usa

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US