பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடம் இடிந்து விழுமா? எச்சரிக்கை எழுப்பும் எம்.பி.க்கள்
பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக எம்.பி.க்கள் எச்சரித்துள்ளனர்.
பிரித்தானிய நாடாளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையை அவசரமாக பழுதுபார்க்க வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.
பிரித்தானிய நாடாளுமன்ற மாளிகையான வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை 147 ஆண்டுகள் பழமையானது. இந்த பழமையான அரண்மனை ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால் இடிந்து விழுக்கூடும் என்றும், இது ஒரு உண்மையான ஆபத்து என்று பிரிட்டிஷ் சட்டமன்ற பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.
Britannica
இதுகுறித்து இங்கிலாந்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் பப்ளிக் அக்கவுண்ட்ஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டிடத்தில் கசிவுஏற்படுவதாகவும், சுவர் கற்கள் விழுவதாகவும், தீ போன்ற ஆபத்துகளைச் சமாளிக்கும் சக்தி இல்லை என்றும் வளாகம் முழுக்க 2,500 இடங்களில் பேட்ச்வொர்க் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், பல ஆண்டுகளாக பழுதுபார்த்து ஒத்திவைக்கப்படுவதாகவும், இதுகுறித்து தொடர்ந்து விவாதம் மட்டுமே நடந்துவருவதால், தேவையான பழுதுபார்ப்பு மேற்கொள்ளப்படும் என்று நம்புவது கடினம் என்று கமிட்டி விமர்சித்துள்ளது.
Pinterest
இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், கட்டிடத்தைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் மீது அதிக கவனம் செலுத்தவில்லை என்றும் குழு தெரிவித்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றமே இந்த அறிக்கையை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Ben Quinton