நாடாளுமன்றத்தில் ஆபாசப்படம் பார்த்த எம்.பி.., பதவி விலக வலியுறுத்தல்
பிரித்தானிய நாடாளுமன்ற மக்களவையில் ஆபாசப்படம் பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட எம்.பி. பதவி விலக வேண்டும் என்று டோரி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமையன்று நடந்த மக்களவை கூட்டத்தில், முன் வரிசையில் அமர்ந்திருக்கும் ஆண் எம்.பி. ஒருவர் மீது இரண்டு பெண் எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர்.
பெயர் குறிப்பிடப்படாமல் குற்றம் குற்றம் சாட்டப்பட்ட அவர், அவையில் காரசாரமான விவாதங்கள் நடந்துகொண்டிருந்த நேரத்தில், அருகில் பெண் உறுப்பினர்கள் இருந்தும் கூட தனது மொபைல் போனில் ஆபாசப்படம் பார்த்ததாக கூறினர். அவர் செய்வதை ஆதாரமாக காட்ட புகைப்படம் எடுக்க முயன்றதாகவும், ஆனால் எடுக்கமுடியவில்லை என்றும் கூறியிருந்தனர்.
ஏற்கெனவே நாடாளுமன்ற வளாகத்திற்குள் இதுபோன்று பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இந்த புதிய குற்றச்சாட்டு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அந்த நபரின் பெயர் வெளியிடப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டு அவர் அவமானப்படுத்தப்படவேண்டும் என்றும் சக தொழிலாளர் காட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் கூறியுள்ளனர். மேலும், அந்த நபர் பதவி விலகவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த பிரச்சினை குறித்து பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், வேலை செய்யம் இடத்தில் ஒருவர் ஆபாசப்படங்களைப் பார்ப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார்.
Picture: Rex/AFP
அதேபோல், சுகாதாரத்துறை செயலர் சஜித் ஜாவித், "சமீபத்தில், நாடாளுமன்றத்தில், தகாத மற்றும் பாலியல் நடத்தைகள் பல சம்பவங்கள் நடந்துள்ளன. இது வெட்கக்கேடானது" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.