ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்: பிரித்தானிய அரசியல் கட்சிகளுக்குள் சலசலப்பு
Prime minister's push for closer relations with Europe is causing ripples in his own party and others: ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் பிரித்தானிய பிரதமரின் திட்டம், அவரது கட்சிக்குள்ளும் மற்ற கட்சிகளுக்குள்ளும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாம், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விடயத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், அந்த விடயம் அவரது கட்சிக்குள்ளும் மற்ற கட்சிகளுக்குள்ளும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
மாறுபட்ட கருத்துகள்
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு பல காரணங்கள் உள்ளன என்றாலும், அவற்றில் முக்கியமான ஒன்று, பணம்.

அதாவது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பெரும் தொகை கொடுக்கவேண்டியிருந்தது, கொடுத்த பணத்துக்கு ஈடாக அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பலன் கிடைக்கவில்லை.
விடயம் என்னவென்றால், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதில் பிரதமர் ஆன்டி பர்னாம் ஆர்வம் காட்டி வருகிறார்.
அப்படி மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா இணையுமானால், மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பெருமளவில் பணம் கொடுக்கவேண்டிவரும் என்பதுடன், தடையில்லா போக்குவரத்து காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடுகளாக உள்ள நாடுகளிலிருந்து ஏராளமானோர் பிரித்தானியாவுக்கு புலம்பெயரலாம் என்னும் அச்சமும் பலருக்கும் உள்ளது.
ஆக, ஆன்டி பர்னாமின் லேபர் கட்சிக்குள்ளும், கன்சர்வேட்டிவ், யூகே ரீஃபார்ம், லிபரல் டெமாக்ரட்ஸ் ஆகிய கட்சிகளுக்கிடையேயும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா இணையும் விடயம் தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
இந்நிலையில், ஆன்டி பர்னாம் இன்று டப்ளினில் ஐரோப்பிய தலைவர்களை சந்திக்க இருக்கிறார்.
அத்துடன், அடுத்த வாரம் பிரஸ்ஸல்ஸில் நடைபெற உள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார் ஆன்டி பர்னாம்.
அந்த மாநாட்டின்போது இருதரப்புக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

ஆக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா இணையும் விடயம் முக்கிய பேசுபொருளாகியுள்ளதால், அரசியல் கட்சிகள் பரபரப்பாகியுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா இணைவதற்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக ஒரு தரப்பினரும் கருத்துக்கள் தெரிவித்துவருகிறார்கள்.
லேபர் கட்சிக்குள்ளேயே இந்த விடயம் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
மொத்தத்தில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா இணையும் விடயம் தொடர்பில் பிரித்தானிய அரசியல் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது.