பிரித்தானிய பாஸ்போர்ட் பெற இவர்கள் சந்திக்கும் நடைமுறை சிக்கல்கள் என்னென்ன?
வடஅயர்லாந்தும் பிரித்தானியாவின் ஒரு பகுதி என்றாலும், அது அயர்லாந்துடன் இணைந்திருப்பதால், மக்களில் சிலர் நடைமுறையில் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
ஒரு நாடு என்கிற வகையில் வடஅயர்லாந்து பிரித்தானியாவின் ஒரு பகுதி. ஆனால், நிலப்பரப்பின்படி, அது அயர்லாந்துடன் இணைந்துள்ளது.
இதனால், அயர்லாந்தில் பிறந்த சிலர், வடஅயர்லாந்தில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் நிலையிலும் அவர்கள் பிரித்தானிய பாஸ்போர்ட் பெறுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
உதாரணமாக, முன்னாள் வடஅயர்லாந்து சபாநாயகராக இருந்த Lord Hay என்பவர், அயர்லாந்து குடியரசில் பிறந்தவர். ஆனால், அவர் நீண்ட காலமாக வடஅயர்லாந்தில் வாழிட உரிமம் பெற்று வசித்துவருகிறார்.
அவர் தனக்கு ஒரு பிரித்தானிய பாஸ்போர்ட் பெறுவதற்கு சிக்கல்களை சந்திக்கவேண்டியிருந்தது.
அதேபோல், Emma DeSouza என்ற பெண், அமெரிக்கரான தன் கணவருக்கு வாழிட உரிமம் கோரி விண்ணப்பிக்கும்போது, அவரை ஒரு பிரித்தானிய குடிமகளாக கருதிய உள்துறை அலுவலகம், அவரது கணவரின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது.
ஆனால், Emmaவிடம் அயர்லாந்து பாஸ்போர்ட்தான் இருந்தது, பிரித்தானிய பாஸ்போர்ட் இல்லை. இவ்விடத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் என்னவென்றால், The Good Friday Agreement என்றொரு ஒப்பந்தம் உள்ளது.
அந்த ஒப்பந்தம், வட அயர்லாந்தில் பிறந்தவர்கள், அயர்லாந்து குடிமக்களாகவோ, பிரித்தானிய குடிமக்களாகவோ, அல்லது இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களாகவோ வாழ்வதை முடிவு செய்ய அனுமதிக்கிறது.
ஆனால், தங்களுக்கோ அல்லது தங்கள் துணைக்கோ வாழிட உரிமமோ அல்லது பாஸ்போர்ட்டோ கோரி விண்ணப்பிக்கும்போது இது சிக்கலை உருவாக்குகிறது.
அதாவது, வட அயர்லாந்தில் வாழ்பவர்கள், ஆனால், அயலாந்து குடியரசில் பிறந்தவர்கள், பிரித்தானிய பாஸ்போர்ட் பெறவேண்டுமானால், அவர்கள் 1.330 பவுண்டுகள் கட்டணம் செலுத்தவேண்டும்.
அத்துடன், அயர்லாந்து குடிமக்களாக கருதப்படுபவர்கள், Life in the UK test என்னும் தேர்வை எழுதி வெற்றி பெறவேண்டும், அதற்கான கட்டணம் 50 பவுண்டுகள். மேலும், குடிமக்களாக மாறும் விழா ஒன்றிலும் அவர்கள் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்ற பல கட்டுப்பாடுகள் உள்ளன.
ஆக, இந்த குழப்பமான நெறிமுறைகளை அகற்றவேண்டும் என வடஅயர்லாந்து விவகாரங்கள் கமிட்டியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.