பிரித்தானியர்களுக்கு பாஸ்போர்ட் தொடர்பில் ஒரு முக்கிய அறிவிப்பு
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் பிரித்தானியர்களுக்கு பாஸ்போர்ட் அலுவலகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த தவறால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்
முன்பெல்லாம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் புகைப்படம் எடுக்கும் பூத் அல்லது ஸ்டுடியோவுக்குச் சென்று புகைப்படம் எடுப்பார்கள்.

இப்போது ஆளாளுக்கு டிஜிட்டல் கமெராக்கள் வைத்துள்ளதால் மக்கள் தாங்களே எடுத்த புகைப்படங்களுடன் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
ஆனால், பாஸ்போர்ட்டில் பயன்படுத்தும் புகைப்படங்களுக்கென சில விதி முறைகள் உள்ளன. அந்த விதி முறைகளுக்கு உட்படும் புகைப்படங்கள் கொண்ட விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
A quick checklist for your digital passport photo:
— His Majesty’s Passport Office (@HM_Passport) June 3, 2026
✅ Taken in the last month
✅ Plain background
✅ No objects or other people
✅ No red eye or shadows
Need more help? Visit: https://t.co/MOzLgu138j #PassportPhotoReady pic.twitter.com/28A9jvYgeK
ஆக, விதிகளுக்கு உட்படும் வகையில் அமைந்துள்ள புகைப்படம் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படவோ, அல்லது உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட தாமதகாவோ வாய்ப்பு உள்ளது என்கிறது பாஸ்போர்ட் அலுவலகம்.
ஆகவே, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்போர் புகைப்படம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |