பாஸ்போர்ட் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...
தங்கள் பாஸ்போர்ட்களை புதுப்பிக்கவேண்டிய பிரித்தானியர்கள் உடனடியாக அதைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
பிரித்தானியர்களுக்கு பாஸ்போர்ட் தொடர்பில் ஒரு எச்சரிக்கை
2023ஆம் ஆண்டின் முதல் பாதியில், வழக்கத்தை விட கூடுதலாக ஒரு மில்லியன் பாஸ்போர்ட் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரை விண்ணப்பிக்கப்படலாம் என்பதால், பின்னர் பாஸ்போர்ட்களை புதுப்பிக்கலாம் என இருப்பவர்கள் பெரும் தாமதத்தை எதிர்கொள்ள நேரிடலாம்.
ஆகவே, உடனடியாக தங்கள் பாஸ்போட்களை புதுப்பித்துக்கொள்ளுமாறு பிரித்தானியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Alamy
இந்த ஆண்டைவிட அடுத்த ஆண்டு தாமதமாகலாம்
பாஸ்போர்ட் புதுப்பித்தல்களைப்பொருத்தவரை, இந்த ஆண்டு, அதாவது 2022, மிகவும் பிஸியான ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டின் முதல் ஒன்பது ஆண்டுகளில் 360,000 பேர் 10 வாரங்களுக்கும் அதிகமாக தங்கள் பாஸ்போர்ட்டுக்காக காத்திருக்க நேர்ந்ததாக தேசிய தணிக்கை அலுவலகம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், பாஸ்போர்ட் புதுப்பித்தல்களைப் பொருத்தவரை சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு இன்னும் அதிக பிஸியாகலாம் எனவும், அதற்கும் தயாராக இருக்குமாறும் உள்துறை அலுவலக நிரந்தரச் செயலரான Matthew Rycroft தெரிவித்துள்ளார்.
Alamy
ஆகவே, பாஸ்போர்ட் புதுப்பித்தல்களுக்கு இதுவே சரியான நேரம் என்று கூறியுள்ள Matthew Rycroft, அடுத்த ஆண்டின் முதல் பாதியில் மட்டுமே வழக்கத்தைவிட ஒரு மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவேண்டியிருக்கலாம் என்றும் எச்சரித்துள்ளார்.