மன்னர் சார்லசுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து கொடுக்கப்பட இருக்கும் பெரும் தொகை
பிரித்தானியாவில் பல்வேறு துறைகளில் பணிபுரிவோர் ஊதிய உயர்வுக்காக சாலைகளில் இறங்கி போராடும் நிலை நிலவுகையில், மன்னர் சார்லசுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து பெரும் தொகை ஒன்று கொடுக்கப்பட இருப்பதாக ஆதாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன
வெவ்வேறு விதத்தில் செய்திகள் வெளியிட்டுள்ள பிரித்தானிய பத்திரிகைகள்
மன்னர் சார்லசுக்கு 2025,26ஆம் ஆண்டுகளில் சுமார் 124.8 மில்லியன் பவுண்டுகள் முதல் 126 மில்லியன் பவுண்டுகள் வரை நிதி வழங்கப்பட உள்ளது.
இதைக் குறித்து, பிரித்தானிய பத்திரிகைகள் வெவ்வேறு விதத்தில் செய்தி வெளியிட்டுள்ளன. ராஜ குடும்ப ஆதரவு பத்திரிகைகள், மன்னர் சார்லசுக்கு அடுத்த ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என செய்திகள் வெளியிட, நடுநிலைமை வகிக்கும் பத்திரிகைகளோ, மன்னர் சார்லசுக்கு 2025,26ஆம் ஆண்டுகளில் சுமார் 45 சதவிகிதம் அதிக ஊதியம் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கின்றன.
Image: PA
எது உண்மை?
உண்மை என்னவென்றால், இந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு விடயங்களுமே உண்மைதான். அதாவது, அடுத்த ஆண்டில் மன்னருக்கு ஊதிய உயர்வு கிடையாது.
ஆனால், 2025இல் அவருக்கு வழங்கப்பட இருக்கும் தொகை, 38.5 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து 124.8 மில்லியன் பவுண்டுகளாக ஆக உள்ளது. அதுவே, 2026இல் 126 மில்லியன் பவுண்டுகளாக அதிகரிக்க உள்ளது உண்மைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Image: PA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |