புகலிடக்கோரிக்கையாளர்களையே குற்றவாளிகளாக்கும் சட்டம்: அகதிகள் ஆதரவு தொண்டு நிறுவனங்கள் குற்றச்சாட்டு

Asylum Seeker United Kingdom Asylum Seekers
By Balamanuvelan Jan 31, 2025 06:46 AM GMT
Report

பிரித்தானியா கொண்டுவர இருக்கும் சட்டம், நூற்றுக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை குற்றவாளிகளாக்கும் அபாயம் உள்ளது என அகதிகள் ஆதரவு தொண்டு நிறுவனங்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளன.

பிரித்தானியா கொண்டுவர இருக்கும் சட்டம்

பிரித்தானிய அரசு, சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, ஆட்கடத்தல் கும்பல்கள் தொடர்பில் ஒரு சட்டத்தைக் கொண்டுவர உள்ளது.

அது தொடர்பான மசோதா நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தங்கள் சொந்த நாட்டில் தங்கள் உயிருக்கு ஆபத்து என்பதால்தான் மக்கள் இன்னொரு நாட்டில் புகலிடம் கோருகிறார்கள்.

ஆனால், பிரித்தானியா அறிமுகம் கொண்டு வர இருக்கும் புகலிடம் மற்றும் புலம்பெயர்தல் தொடர்பான சட்டம், அப்படி புகலிடம் கோருபவர்களை குற்றவாளிகள் என கருதப்படும் நிலையை உருவாக்கக்கூடும் என அகதிகள் ஆதரவு தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.

அந்த சட்டம், சட்டப்படி பிரித்தானியாவில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு விதிக்க உள்ளது.

புகலிடக்கோரிக்கையாளர்களையே குற்றவாளிகளாக்கும் சட்டம்: அகதிகள் ஆதரவு தொண்டு நிறுவனங்கள் குற்றச்சாட்டு | Uk People Smuggling Law Risk Asylum Seekers

ஆக, அப்படி முறையாக புகலிடம் கோருவோருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பட்சத்தில், அவர்களால் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலை உள்ளதால், வேறு வழியின்றி அவர்கள், சட்டவிரோதமாக ஆட்கடத்தல் செய்யும் கும்பல்களை நாடும் அபாயம் உள்ளது.

சிறு படகுகளில் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக, குழந்தைகளுடன் வரும் பெற்றோரை தண்டிக்க அந்த சட்டம் வழிவகை செய்கிறது. அப்படி பெற்றோர் கைது செய்யப்பட்டால் அவர்களுடைய பிள்ளைகள் தங்கள் பெற்றோரை பிரியும் அபாயம் உள்ளது.

சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாயில் பயணிப்பவர்களை பிரெஞ்சு அதிகாரிகள் தடுக்க முயலும்போது, தாங்கள் எப்படியாவது பிரித்தானியாவுக்குள் சென்றுவிடவேண்டும் என்பதற்காக, சிலர், பிரெஞ்சு அதிகாரிகளை தங்கள் படகுகளில் ஏற, அல்லது தங்களை கைது செய்ய அனுமதிக்க மறுக்கிறார்களாம்.

இனி, அப்படி பிரெஞ்சு அதிகாரிகளை தடுப்பவர்களுக்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட இருக்கிறதாம்.

தங்கள் நாட்டில் பிரச்சினை என்பதற்காக உயிர் தப்ப ஓடிவரும் ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளை குற்றவாளிகள் ஆக்குவதால் ஆட்கடத்தல்காரர்களின் நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்கின்றன தொண்டு நிறுவனங்கள்.

அகதி ஒருவர் படகில் ஏறும்போது, ஆயுதத்துடன் நிற்கும் ஒரு கடத்தல்காரரைக் கண்டு அவர் பயந்துபோயிருக்கும் நிலையில், அவர் தனது உயிருக்கு பயப்படுவாரா, அல்லது பிரித்தானியாவின் சட்டங்களைக் குறித்து யோசித்துக்கொண்டிருப்பாரா என கேள்வி எழுப்புகிறார் Refugee Council என்னும் தொண்டு நிறுவனத்தின் செயல் அதிகாரியான Enver Solomon என்பவர்.

ஆக, எல்லைகளைக் கடந்து வரும் அகதிகளால் ஏற்படும் சவால்களை பிரித்தானிய அரசு தீர்க்கவேண்டுமானால், அந்த அகதிகள் தங்கள் நாட்டில் எந்த பிரச்சினைக்காக பயந்து ஓடிவந்தார்களோ, அந்த பிரச்சினைகளைத் தீர்க்கத்தான் முதலில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார் Enver Solomon.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US