புதிதாக 77 பேர் பாதிப்பு... பிரித்தானியாவில் அதிர்ச்சி தரும் குரங்கம்மை தொற்றாளர் எண்ணிக்கை
பிரித்தானியாவில் புதிதாக 77 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 302 என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரங்கம்மை தொற்றும் காற்றில் பரவும் வியாதி இல்லை என்பதால், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் மிகவும் குறைவு என்றே சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிரித்தானியாவில் திடீரென்று 77 பேர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வார இறுதி நாட்களில் குரங்கம்மை தொற்றாளர்கள் தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், திங்கட்கிழமை அறிவித்துள்ளனர்.
குரங்கம்மை தொற்றானது நெருங்கிய உடல் தொடர்பு மூலம் பரவுகிறது, மேலும் படுக்கை விரிப்புகள் அல்லது துண்டுகள் போன்றவற்றில் நீண்ட நேரம் வாழலாம் எனவும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அசாதாரண தடிப்புகள் அல்லது புண்கள் தொற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர், பெருந்திரள் கூட்டங்கள் அல்லது விருந்துகளில் பங்கேற்றவர்கள் என்றே தெரிய வந்துள்ளது.