பிரான்சிற்கு நாளை முதல் வரும் பிரித்தானியர்களுக்கு புதிய கட்டுப்பாடு! வெளியான முக்கிய தகவல்
பிரித்தானியாவில் இருந்து பாரிசிற்கு வரும் பயணிகள் இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக் கொள்ளாதபட்சத்தில், பிசிஆர் பரிசோதனை முக்கியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாளை முதல்(நவம்பர் 1) பிரான்ஸ் தலைநகர் பாரிசிற்குள் வரும் பிரித்தானியா பயணிகள் இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளாத பட்சத்தில், கட்டாயம் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாரிஸ் காவல்துற தலைமை செயலகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரித்தானியாவில் கொரோனா தொற்று மிகவும் அதிகரித்துள்ளதை அடுத்து, இந்த புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரித்தானிய பயணிகள் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்ட ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அதற்குரிய கட்டணங்கள் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.