குறைந்த கட்டணத்தில் விசா வழங்க பிரித்தானியா திட்டம்! எந்த நாட்டினருக்கு தெரியுமா?
பிரித்தானியா அரசு, இந்தியாவுடன் புதிய ஒப்பந்தகம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன், இந்தியா எப்போதுமே தங்களுடைய நண்பன் என்று கூறுவார். இந்தியாவிற்கும், தங்களுக்கும் இருக்கும் நட்பு பல காலமாக நீடித்து வருவதாக கூறுவார்.
இந்நிலையில், பிரித்தானியா, இந்தியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஆலோசனை நடத்த பிரித்தானியாவின் வர்த்தக செயலாளர் ஆனிமேரி டிரிவெல்யன் இந்த மாதம் தலைநகர் டெல்லிக்கு செல்லவுள்ளதாகவும், இந்த ஒப்பந்தத்தை வெற்றி பெறவைக்கும் முயற்சியாக இந்தியர்களின் குடியேற்ற விதிகளை தளர்த்த பிரித்தானியா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்திய சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் மற்றும் பணி நிமித்தமாக பிரித்தானியா வருபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மற்றும் எளிதான முறையில் விசாக்களை வழங்குவதற்கு அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகிறது.