புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானியாவிலிருந்து வெளியேற்ற புதிய அரசின் திட்டம்
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்தை ரத்து செய்வேன் என உறுதியளித்து தேர்தலில் வெற்றி பெற்ற கெய்ர் ஸ்ட்ராமர், சொன்னபடியே அந்த திட்டத்தை ரத்து செய்தார்.
ஆனால், அதற்கு பதிலாக தற்போது புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த ஸ்டார்மர் அரசு திட்டமிட்டுவருகிறது.
புதிய அரசின் திட்டம்
பிரித்தானியாவை ஆண்ட முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு, சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்வோரை ஆப்பிரிக்க நாடான ருவாண்டா போன்ற ஒரு நாட்டுக்கு நாடுகடத்தி, அவர்களுடைய புகலிடக்கோரிக்கைகளை பரிசீலிக்கும் வரை அவர்களை அந்நாட்டில் தங்கவைக்க திட்டமிட்டிருந்தது.
ஆனால், தான் தேர்தலில் வெற்றி பெற்றால் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்தை ரத்து செய்வேன் என உறுதியளித்து தேர்தலில் வெற்றி பெற்றார் கெய்ர் ஸ்ட்ராமர், சொன்னபடியே அந்த திட்டத்தை ரத்தும் செய்தார்.
ஆனால், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த ஸ்டார்மர் அரசு திட்டமிட்டுவருகிறது.
அதாவது, புகலிடக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, மேல் முறையீடுகளும் தோல்வியடையும் பட்சத்தில், அத்தகையோரை மேற்கத்திய பால்கன் நாடுகளுக்கு அனுப்ப ஸ்டார்மர் அரசு திட்டமிட்டுவருகிறது.
அவ்வகையில், இத்தகைய புகலிடக்கோரிக்கையாளர்கள், அல்பேனியா, செர்பியா மற்றும் போஸ்னியா போன்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கிறார்கள்.
பாதுகாப்பான நாடுகளிலிருந்து வந்தவர்கள் என கருதப்படுவோர், இந்த நாடுகளிலிருந்து மீண்டும் தங்கள் நாடுகளுக்கு நாடுகடத்தப்படுவதுதான் திட்டம். இந்த திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |