எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஊக்குவிக்கும் பிரித்தானியா - புதிய சலுகைகள் அறிவிப்பு
புதிய எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.
பிரித்தானிய அரசு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எரிபொருள் வாகனங்களை கொண்டுவரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, எலெக்ட்ரிக் வாகனங்களை (EV) அதிகம் வாங்க ஊக்கமளிக்கும் புதிய சலுகைகளை விரைவில் அறிவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் போக்குவரத்துத்துறை செயலாளர் ஹைடி அலெக்ஸாண்டர், இந்த வாரம் புதிய EV ஊக்கத்திட்டங்களை அறிவிப்பதாக BBC-யில் கூறியுள்ளார்.
இருப்பினும், 700 மில்லியன் பவுண்டு மதிப்பில் புதிய உதவித் தொகை மற்றும் நிதி உதவிகள் வழங்கப்படும் என்ற ஊடகச் செய்திகள் குறித்து அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்தார்.
"எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் குறைவான செலவில் மாற்றம் செய்ய முடியும்," என்று ஹைடி கூறினார்.
இதன் ஒரு பகுதியாக, வீட்டுவாசல்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து தளங்களில் மின்சார சார்ஜிங் வசதிகளை உருவாக்க 63 மில்லியன் பவுண்டு முதலீடு செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டங்கள், EV வாகனங்களை ஏற்கும் விகிதத்தை உயர்த்தவும், காற்று மாசுபாட்டை குறைக்கவும், பிரித்த்தானியாவை பசுமை போக்குவரத்துக்கான முன்னோடியாக மாற்றவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK EV incentives 2025, UK electric vehicle subsidy, EV grants in the UK, UK charging infrastructure 2025, Heidi Alexander EV announcement, Labour government EV policy