புகலிடகோரிக்கையாளர்களை நாடுகடத்துவதை விரைவாக்க புதிய சட்டம்: பிரித்தானியா தீவிரம்
வெளிநாட்டுக் குற்றவாளிகளையும், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களையும் நாடுகடத்துவதை தடுக்கும் விதிகளை எதிர்கொள்ள பிரித்தானிய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது.
சொல்லப்போனால், அதற்காக புதிய சட்டமே கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுவருகிறது.
பிரித்தானியாவின் குற்றவாளிகள்
குற்றவாளிகள் என தெரிந்தும் சிலர் சட்டத்தில் உள்ள சில ஓட்டைகளை பயன்படுத்தி, நாடுகடத்தப்படுவதிலிருந்து தப்பி பிரித்தானியாவில் வாழ்ந்துவருவதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனியர்களுக்கான விசாவில் பிரித்தானியாவில் வாழ, பாலஸ்தீனிய குடும்பம் ஒன்றிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் எல்லாம், மனித உரிமைகள் சட்டத்தின் 8ஆவது பிரிவைப் பயன்படுத்தியே நாடுகடத்தப்படுவதிலிருந்து தப்பியுள்ளார்கள்.
நாடுகடத்துவதை விரைவாக்க புதிய சட்டம்
ஆகவே, வெளிநாட்டுக் குற்றவாளிகளையும், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களையும் நாடுகடத்துவதை தடுக்கும் விதிகளை எதிர்கொள்ள பிரித்தானிய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது.
நீதிமன்றங்கள் மனித உரிமைகளை சுட்டிக்காட்டி இத்தகைய நபர்களை நாடுகடத்துவதை தடுத்துவருவதால், புதிய விதிமுறைகளை வகுக்கவும், தேவைப்பட்டால், நாடுகடத்தலை விரைவாக்கவும் புகலிடக்கோரிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் புதிய சட்டமே கொண்டுவரவும் பிரித்தானிய அரசு திட்டமிட்டுவருவதாக அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |