புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கை: சட்டத்திருத்தம் கொண்டுவர பிரித்தானியா திட்டம்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்துவரும் பிரித்தானிய அரசு, அடுத்தகட்ட நடவடிக்கையாக சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது.
சட்டத்திருத்தம் கொண்டுவர திட்டம்
சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு வந்த புலம்பெயர்வோரில் 80 சதவிகிதம் பேர், தாங்கள் ஆட்கடத்தல்காரர்களை தொடர்புகொள்ளவும் கண்டுபிடிக்கவும் சமூக ஊடகங்களையே பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்கள்.
அதாவது, பிரித்தானியாவுக்குள் நுழைந்தால் வேலை கிடைக்கும் என்று கூறி, போலி பாஸ்போர்ட்கள், விசா முதலான ஆவணங்களை விற்பது போன்ற செயல்களை ஆட்கடத்தல்காரர்கள் சமூக ஊடகங்கள் மூலமாகத்தான் செய்துவருகிறார்கள்.

பிரித்தானிய கமக்களின் வரிப்பணத்தில் வாழும் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோர் - நிதியை நிறுத்த தலைவர்கள் அழுத்தம்
ஆகவே, அதைத் தடுத்து நிறுத்துவதற்காக, ஆட்கடத்தல்காரர்கள் புலம்பெயர்வோரைக் கவரும் வகையில் சமூக ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்வதைத் தடுக்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.
இனி அப்படி விளம்பரம் செய்வோருக்கு தண்டனையாக, ஐந்து ஆண்டுகள் வரை சிறை மற்றும் ஒரு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும்.
இந்த மாற்றங்களை அமுல்படுத்தும்வகையில், அமைச்சர்கள் எல்லை பாதுகாப்பு மசோதாவில் சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவர முடிவு செய்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |